Friday, April 29, 2005

தனி வளை

ச(க)ளைக்காத சுஜாதா(த்)தா

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
ÔÔயு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!ÕÕ என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோÕÕ என்றேன்.
ÔÔஎதுக்குப்பா?ÕÕ

ÔÔதொடுங்களேன்!ÕÕ

சற்று வியப்புடன் தொட்டார்.

ÔÔமத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!ÕÕ என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
ÔÔரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து...ÕÕ

ÔÔஇது என்னப்பா ட்ரிக்கு?ÕÕ என்று அப்படியே செய்தார்.

ÔÔஉங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!ÕÕ என்றேன்.
அசந்து போய், ÔÔகை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?ÕÕ
ÔÔஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!ÕÕ என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். Ôரம்யா கிருஷ்ணன்Õ என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் Ôஜகதலப்ரதாபன்Õ சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி&யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் Ôஆபிச்சுவரிÕ பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. ஜிஷீபீணீஹ் மி ணீனீ ணீறீக்ஷீவீரீலீt, tலீணீஸீளீ நிஷீபீ!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், Ôசிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!Õ.

ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் ஜீக்ஷீஷீரீக்ஷீமீssவீஸ்மீ நீஷீனீஜீக்ஷீஷீனீவீsமீs (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் Ôகொட்டு மேளம்Õ கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய (ஷ்ஷ்ஷ்.ணீனீதீணீறீணீனீ.நீஷீனீ) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... Ôநாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?Õ என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... Ôநாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!Õ என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். ÔஆÕ கதையைப் படித்துவிட்டு, Ôஎன் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்Õ என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன்.

அதுதான் என்னுடைய நோபெல்!

Thursday, April 28, 2005

Ten Step Guide To Being Handy Around The House
April 22nd, 2005

* If you can’t find a screwdriver, use a knife. If you break off the tip, it’s an improved screwdriver.

* Try to work alone. An audience is rarely any help

* If what you’ve done is stupid, but it works, then it isn’t stupid.

* Work in the kitchen whenever you can … many fine tools are there, its warm and dry, and you are close to the refrigerator.

* If it’s electronic, get a new one … or consult a twelve-year- old.

* Stay simple minded: Get a new battery; replace the bulb or fuse; see if the tank is empty; try turning the switch “on” ; or just paint over it.

* Always take credit for miracles. If you dropped the alarm clock while taking it apart and it suddenly starts working, you have healed it.

* Regardless of what people say, kicking, pounding, and throwing sometimes DOES help.

* If something looks level, it is level.

* If at first you don’t succeed, redefine success.

» Ever Find Yourself Struggling to Express Your Thoughts and Feelings?

Ever Find Yourself Struggling to Express Your Thoughts and Feelings?
April 27th, 2005

by: Pat Morgan

It can be challenging to find the right words to express what we really want to say. We often think that good communication is only about being heard, but is it not also about being a good listener? It may be difficult to identify our communication problems. Having someone to offer fresh perspective can help you to clarify specific communication issues and improve your skills. Working with a coach can help you focus on the message you want to communicate and to put language around the thoughts and feelings you want to express.

Four Tips for Improving Communication…

1. LISTEN. A wise person once told me that we have two ears and one mouth so that we can listen twice as much as we talk. That got my attention. It sounds so simple, but how many times are you engaged in conversation and are not really listening? Your mind is on your next meeting, client, project, dinner, kids or maybe you’re just busy thinking about the next thing you’re going to say when the speaker takes a breath. In any event, listening is a skill that can be improved.

Ask yourself: Do I listen twice as much as I speak? Do I need to improve my listening skills?

2. BE RESPECTFUL. Even in situations where communication may be difficult, treating the other person with respect allows more open and constructive exchange of opinions and ideas.

Ask yourself: Am I respectful when communicating with others?

3. RESPOND RATHER THAN REACT. Watch your emotions. If what the speaker is saying creates an emotional response in you, listen extra carefully with attention to the intention and full meaning of their words. When we are angry, frightened or upset, we often miss critical parts of what is being said. Be slow to disagree, criticize or argue. Even if you disagree, let them have their point of view. If you respond in a way that makes the other person defensive, even if you “win” the argument, you may lose something far more valuable.

Ask yourself: Do I react rather than respond?

4. IMPROVE YOUR COMMUNICATION SKILLS. If you find yourself unable to express your thoughts effectively with co-workers, clients, your partner or family, perhaps you would benefit from working with a professional who can help you clarify and develop language to more clearly express yourself.

Ask yourself: Who will I ask to help me improve my communication skills?

Just for fun…

Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn’t mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoetnt tihng is taht the frist and lsat ltteer be at the rghit pclae. The rset can be a total mses and you can sitll raed it wouthit porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe.

Fun Fact: We listen at 125-250 words per minute, but think at 1000-3000 words per minute.

Quotes

“Listening is a magnetic and strange thing, a creative force. The friends who listen to us are the ones we move toward. When we are listened to, it creates us, makes us unfold and expand.” ~ Karl Menninger

“Take advantage of every opportunity to practice your communication skills so that when important occasions arise, you will have the gift, the style, the sharpness, the clarity, and the emotions to affect other people.” ~ Jim Rohn

About The Author:
Pat Morgan, MBA and Professional Coach, has 10 years experience helping teams manage organizational and cultural change. As President of Smooth Sailing, she supports individuals and organizations in managing change, improving performance and achieving excellence both professionally and personally. She has created and led workshops and seminars for organizations such as: the National Association of Women Business Owners (NAWBO), the American Society for Training and Development (ASTD) and Rotary International.—coach@chartingthecourse.biz

Tuesday, April 26, 2005

[Ornet] YOU ARE AN INDIAN IF...... (fwd)

01.Everything you eat is savored in garlic, onion and tomatoes.
>
>02. You try and reuse gift wrappers, gift boxes, and of course aluminum
>foil.
>
>03. You try to eject food particles from between your teeth by pressing
>your tongue against them and making a peculiar noise like- tshick,
>tshick, tschick, tschick.
>
>04. You are standing next to the two largest size suitcases at the Airport.
>
>05. You arrive one or two hours late to a party- and think its normal.
>
>06. You peel the stamps off letters that the Postal Service missed to
>markup.
>
>07. You recycle Wedding Gifts.
>
>08. You name your children in rhythms (example, Honey & Money, Sita &
>Gita, Ram & Shyam).
>
>09. All your children have pet names, which sound nowhere close to their
>real names.
>
>10. You take Indian snacks anywhere it says "No Food Allowed"
>11. You talk for an hour at the front door when leaving someone's house..
>
>12. You load up the family car with as many people as possible.
>
>13. You use plastic to cover anything new in your house whether it's
>the remote control, VCR, carpet or new couch.
>
>14. Your parents tell you not to care what your friends think, but they
>won't let you do certain things because of what the other "Uncles and
>Aunties" will think.
>
>15. You buy and display crockery, which is for special occasions, which
>never happens.
>
>16. You have a vinyl tablecloth on your kitchen table.
>
>17. You use grocery bags to hold garbage.
>
>18. You keep leftover food in your fridge in as many numbers of bowls
>as possible.
>
>19. Your kitchen shelf is full of jam jars, varieties of bowls and
>plastic utensils (gotten free with some household items).
>
>20. You carry a stash of your own food whenever you trav! el (and travel
>means any car ride longer than 15 minutes).
>
>21. You own a rice cooker or a pressure cooker.
>
>22. You fight over who pays the dinner bill.
>
>23. You majored in engineering, medicine or law and now........are
>after Software and only Software no matter which field you belong to.
>
>24. You live with your parents and you are 40 years old (and they prefer
>it that way).
>
>25. You don't use measuring cups when cooking.
>
>26. You feel like you've gotten a good deal if you didn't pay tax.
>
>27. You never learnt how to stand in a queue.
>
>28. You can only travel if there are 5 persons at least to see you off
>or receive you whether you are traveling by bus, train or plane.
>
>29. If she is NOT your daughter, you! always take interest in knowing
>whose daughter has run with whose son and feel proud to spread it at the
>velocity of more than the speed of light.
>
>30. You only make long distance calls after 11 p.m.
>
>31. If you don't live at ! home, when your parents call, they ask if
>you've eaten, even if it's midnight.
>
>32. You call an older person you never met before "uncle."
>
>33. When your parents meet strangers and talk for a few minutes, you
>discover you're talking to a distant cousin.
>
>34. Your parents don't realise phone connections to foreign countries
>have improved in the last two decades, and still scream at the top of their
>lungs when making foreign calls.
>
>35. You have bed sheets on your sofas so as to keep them from getting
>dirty.
>
>36. When dining out, you think Rs 10 is enough of a tip.
>
>37. It's embarrassing if your wedding has less than 600 people.
>
>38. You list your daughter as "fair and slim" in the matrimonial no
>matter what she looks like.
>
>39. You treat the NRI persons (especially from America) as if they are
>the only persons living in this world (including YOU).
>
>40. You've seen the gro! und while inside the lavatory of a train.
>
>41. All your Tupperwa re is stained with food color.
>
>42. You have drinking glasses made of steel.
>
>43. You have m! astered the art of bargaining in shopping.
>
>44. You have really enjoyed reading this mail- forward it to as many
>Indians as possible

Monday, April 25, 2005

Thooraparvai: Wi-Fi க்கும் Wi-Max க்கும் என்ன வித்தியாசம்?

Wi-Fi க்கும் Wi-Max க்கும் என்ன வித்தியாசம்?
Wi-Max , அப்படின்னா என்ன?
Worldwide Interoperability for Microwave Access, இதன் சுருக்கம் தான்வை-மாக்ஸ். கம்பி இல்லாமல் நுண்ணலை மூலம் இணையத்தில் இணைவது.

Wi-Fi க்கும் Wi-Max க்கும் என்ன வித்தியாசம்?
Wi-Fi, தற்போது இருக்கும் எல்லா மடிக் கணிணியிலும் இருக்கும் வசதி. இதன் வேகம் சுமார் 11-54 Mb/S.இதன் உச்ச வேகம் வினாடிக்கு 54 மில்லியன் பீட்டுகள். இதன் சேவைப் பகுதி சுமார் இருநூறு அடிகள்.
Wi-Max புதியதாக அறிமுகம் ஆகப் போகிற தொழில்நுட்பம். இதன் வேகம் சுமார் 70 Mb/S. இதன் சேவைப் பகுதி50 கிலோ மீட்டர். சுருக்கச் சொன்னால் Wi-Fi வீட்டில் இருக்கும் cordless தொலைபேசி போல. Wi-Max சட்டை பையில்இருக்கும் செல்பேசி போல.